தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திவழிப்பறி செய்த 3 பேர் சிக்கினர்


தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், வாலிபரை கத்தியால் குத்தி செல்போன், பணத்தை வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

தூத்துக்குடி சிலுவைபட்டி தாய் நகரைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவருடைய மகன் செல்வம் (வயது 37). சம்பவத்தன்று இவர் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் செல்வத்தை வழிமறித்து கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த மல்லி என்ற மாலைராஜா மகன் சந்தனராஜ் (20), தாளமுத்துநகர், நேருநகரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் இசக்கிராஜா (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து செல்வத்தை கத்தியால் குத்தி, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

கைது

உடனடியாக தனிப்படை போலீசார், சந்தணராஜ், இசக்கிராஜா மற்றும் சிறுவனையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த 3 பேரும் தாளமுத்துநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த போலீார் 3 பேரையும் கைது ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story