தூத்துக்குடியில் மது விற்ற 2 பேர் கைது
தூத்துக்குடியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மடத்தூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் செல்வம் (48), முத்துராஜ் மகன் துரைராஜ் (43) ஆகிய 2 பேரும் சேர்ந்து சட்ட விரோத விற்பனைக்காக மதுபாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் செல்வம், துரைராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 38 கிலோ புகையிலை பொருட்கள், 84 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட துரைராஜ் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story