தூத்துக்குடியில்நாளை மறுநாள் 4-ம் கேட் மூடல்


தூத்துக்குடியில்நாளை மறுநாள் 4-ம் கேட் மூடல்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை 4-ம் கேட் மூடப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி-மதுரை இடையே இரட்டை ரெயில்பாதை பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி தூத்துக்குடி 4-ம் கேட் பகுதியில் ரெயில் தண்டவாள பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதில் மேலும் சில பணிகளை மேற்கொள்வதற்காக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 4-ம் கேட் மூடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story