தூத்துக்குடியில் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பேரணி


தூத்துக்குடியில்  காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சுழல் துறை, பள்ளிக் கல்வி துறை மற்றும் மத்திய மாசு கட்டுப் வாரியம் ஆகியோர் இணைந்து தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணி சாமுவேல்புரம் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கியது. பேரணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் காற்று மாசு தவிர்ப்பது குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தியபடி சென்றனர். இதில் தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர், கவுன்சிலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story