தூத்துக்குடியில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 2:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் காலை சிற்றுண்டிதிட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த கோரி நேற்று தூத்துக்குடியில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் உத்தண்டராமன் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் துறை எபனேசர் டேனியல் தனராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் அய்யாக்குட்டி, மாநில துணைத்தலைவர் வேல்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஜி.பி.எப் பெறுவதற்கு மூத்த குடிமக்களை சிரமப்படுத்தக் கூடாது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் வழங்கப்பட வேண்டிய பொங்கல் கருணைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள், திரளான அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story