தூத்துக்குடியில்மது குடிக்க பணம் கேட்டு மனைவியை தாக்கியவர் கைது
தூத்துக்குடியில் மது குடிக்க பணம் கேட்டு மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டூவிபுரம் 11-வது தெருவை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 32). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் போலீஸ் நிலையங்களில் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், மனைவி கலாவிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதுகுடிக்க பணம் கேட்டு அரிவாளாளை திருப்பி வைத்து மனைவியை தாக்கினாராம்.
இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் வழக்கு பதிவு செய்து ராஜாமணியை கைது செய்தார்.
Related Tags :
Next Story