தூத்துக்குடியில்வங்கி ஏ.டி.எம். மையங்களில் மறைமுக கேமராக்களை நிறுவ வலியுறுத்தல்


தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களில் மறைமுக கேமராக்களை நிறுவவேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களில் மறைமுக கேமராக்களை நிறுவவேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி மற்றும் ஏ.டி.எம் எந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண்காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமிராக்கள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் நிறுவ வேண்டும்.

எச்சரிக்கை மணி

ஏ.டி.எம் எந்திரங்கள் உடைக்கப்படும் போது அந்த மையத்திலும், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை மணி ஒலிக்க வழிவகை செய்ய வேண்டும். அனைத்து வங்கி ஏ.எடி.எம் மையங்களிலும் பாதுகாவலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story