தூத்துக்குடியில் மன்னர் தேர்மாறன் பிறந்தநாள்
தூத்துக்குடியில் மன்னர் தேர்மாறன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் முத்துக்குளித்துறையின் 16-வது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன். டச்சுப்படை, கிழக்கிந்திய நிறுவனத்தின் படை என இரு அரசுகளை எதிர்த்துப் போரிட்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களுக்கு உதவி செய்தவர் ஆவார். தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் உள்ள தங்கத் தேரை செய்து தந்த இவரை, மக்கள் தேர்மாறன் என்று அழைக்கின்றனர். இந்த மன்னரின் கல்லறை லசால் பள்ளி வளாகத்தில் உள்ளது. அங்கு அவரது 269-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தொழில் அதிபர் பீட்டர் பர்னாண்டோ தலைமை தாங்கினார். கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் ரோமால்டு, முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் ஜான்சன், பியோ பரதர், எழுத்தாளர் பீட்டர் பிரான்சிஸ், தேவ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹெர்மன்கில்டு வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மீனவ மக்கள் கட்சி தலைவர் அலங்காரபரதர், பேராசிரியை பாத்திமா பாபு, இந்திய மீனவர் சங்கம் ராஜூ பரதர் ஆகியோர் கலந்து கொண்டு தையல் எந்திரம், குடம், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் எழுத்தாளர் நெய்தல் அண்டோ, குருஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சசிக்குமார், சேவியர் சில்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எட்வின்பாண்டியன் நன்றி கூறினார்.