தூத்துக்குடியில்வீட்டிற்குள் அழுகிய நிலையில் வெல்டர் உடல் மீட்பு
தூத்துக்குடியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் வெல்டர் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48). இவர் தூத்துக்குடி கோயில்பிள்ளை நகரில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி இருந்து, தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 12-ந் தேதி பணி முடிந்து வீட்டுக்கு வந்து உள்ளார். அதன்பிறகு அவர் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலையில், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேஷ் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தற்கொலை செய் கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.