தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு. மாநில மாநாடு ஜோதிக்கு வரவேற்பு
தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு. மாநில மாநாடு ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை சி.ஐ.டி.யு. 15-வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் ஏற்றுவதற்காக தோழர் நல்ல சிவன் நினைவு ஜோதி நேற்று நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து சி.ஐ.டி.யு மாநிலச் செயலாளர்கள் ஆர்.மோகன், ஆர்.ரசல் ஆகியோர் தலைமையில் ஜோதி பயணம் தொடங்கியது. இந்த ஜோதி நேற்று தூத்துக்குடிக்கு வந்தது. தூத்துக்குடி பழைய பஸ் நிலைம் முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் முனியசாமி, மாரியப்பன், மணவாளன், சங்கரன், ரவிதாகூர், மாவட்ட குழு உறுப்பினர்கள் குமாரவேல், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஜோதி பயணம் நடந்தது. அப்போது மேலும் 7 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜோதி பயணம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றது.