தூத்துக்குடியில் மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்


தூத்துக்குடியில்  மாநகராட்சி, நகராட்சி   ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
x

தூத்துக்குடியில் மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவாறு 70 வயது ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம்10 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்கள் சண்முகவேல், எம்.அந்தோணிசாமி, போலீஸ் துறை ஓய்வு பெற்ற நலச்சங்க துணை செயலாளர் நயினார், நகராட்சி ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரி மாரியப்பன், மேரி, குருவம்மாள், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story