தூத்துக்குடியில் வயிற்றை கத்தியால் கிழித்து முதியவர் தற்கொலை


தூத்துக்குடியில்   வயிற்றை கத்தியால் கிழித்து  முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வயிற்றை கத்தியால் கிழித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வயிற்றை கத்தியால் கிழித்துக் கொண்டு முதியவர் தற்கொலை செய்தார்.

முதியவர்

தூத்துக்குடி அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 67). இவரது மனைவி சுந்தரம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர். சுப்பையா சில வீடுகளை வாடகைக்கு விட்டு, அதன்மூலம் குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுந்தரம்மாள் இறந்து விட்டார். இதனால் சுப்பையா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார். மனைவி இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட சுப்பையா வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வயிற்றை கிழித்து தற்கொலை

நேற்று சுப்பையா வயிற்றை கத்தியால் கிழித்துக்கொண்டு குடல் சரிந்த நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கான கடிதம் சிக்கியது

தொடர்ந்து போலீசார் சுப்பையா வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும், கத்தியையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், 'எனது மனைவி இறந்ததால் எனக்கு மனம் சரியில்லாமல் இருந்தது. மேலும் வயிற்று வலியும் இருக்கிறது. இதனால் என்னை பார்ப்பதற்கு ஆள் இல்லை. இதன் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் வயிற்றை கத்தியால் கிழித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story