தூத்துக்குடியில்தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர் கைது
தூத்துக்குடியில் பணம் கேட்டு அரிவாளை காட்டி தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி சுடலை காலனி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ் என்ற டியோ முனீஸ் (வயது24), வெற்றிவேல் மகன் சாமுவேல் (25) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து விக்னேஷ், சாமுவேல் ஆகிய 2 பேரும் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.