தூத்துக்குடியில்துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் நேற்று மதியம் துறைமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கேன்டீன் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், 2020-21-ம் ஆண்டுக்கான போனசை உடனே வழங்க வேண்டும், பணமாக்கல் திட்டத்தில் துறைமுக சொத்துக்களை விற்பதை கைவிட வேண்டும், துறைமுக ஆஸ்பத்திரியை தனியார் பங்களிப்புடன் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு சுதீந்திர குமார், கே.காசி, மீனாட்சி சுந்தரேசன், போர்ட் மெரைன்ஸ் அன்ட் சென்ரல் ஸ்டாப் யூ னியன் சத்ய நாராயணன், ஆரோக்யராஜ், போர்ட் யுனைடட் ஒர்க்கர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஜான் கென்னடி, கிளிண்டன், ஜீடு, நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் ராஐேகாபாலன், சந்திரசேகர், ஸ்டீபன், போர்ட் எம் பிளாயீஸ் டிரேட் யூனியன் விஜய் செல்லையா, வ.உ சி போர்ட் எம்பிளாயீஸ் டிரேட் யூனியன் ஏ.ஐ.டியுசி பாலசிங்கம், போர்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் செல்வகுமார், போர்ட் அண்ணா டாக் சங்கம் சண்முககுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story