தூத்துக்குடியில்மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு


தூத்துக்குடியில்மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு சனிக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான தூத்துக்குடி மாவட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் உள்ள சின்னகண்ணுபுரத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் கிரிக்கெட் அணி தேர்வு நடக்கிறது. இதில் 01.09.2004 அன்றோ, அதற்கு பிறகோ பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் கிரிஸ்பின் 8015621154 தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமரன் தெரிவித்து உள்ளார்.


Next Story