தூத்துக்குடியில்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலத்துக்கு மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ஜூடி, கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப்மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் வடக்கு பீச் ரோடு கால்டுவெல் பள்ளி முன்பு இருந்து தொடங்கியது. ஊர்வலம் திரேஸ்புரம், பூபாலராயர்புரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி பதாதைகளை ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர். இதில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story