தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


தூத்துக்குடியில்  மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய பொறியாளர் மற்றும் பணியாளர் சங்கங்கள் சார்பில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. மின்ஊழியர் மத்திய அமைப்பு மரியதாஸ் தலைமை தாங்கினார். போராட்டத்தில், மின்வாரிய உத்தரவு எண் இரண்டை ரத்து செய்ய வேண்டும், பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மின்சார வாரியத்தில் உள்ள 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு அனைத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அண்ணா மின்ஊழியர் தொழிற்சங்க செயலாளர் அய்யாச்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் அனல்மின்நிலைய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story