தூத்துக்குடியில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்


தூத்துக்குடியில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
x

தூத்துக்குடியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) பொதுச்செயலாளர் து.ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்து உள்ளார். மானியங்களுடன் கூடியகடன் உதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கநிறுவனம், தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்து தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாமை வருகிற 28-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை துடிசியா அரங்கத்தில் நடத்துகிறது.

இந்த முகாமில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ளவர்கள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமுக்கு கட்டணம் கிடையாது. முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வதுஎப்படி, தொழில் தொடங்க இருக்கும் முனைவோர்க்கு அரசு மற்றும் பிறநிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கி கூறப்படும். பயிற்சியின் முடிவில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்தகட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்தகட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிதிஉதவிகள் பெறஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசுவழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதிஉதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதிஉதவிபெறும் 'தொழில் முனைவோர் மேம்பாட்டுபயிற்சியாளர்' திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியில் இருந்து விலக்கு பெறலாம். இந்த பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும். மேலும் முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு : 94899 81646 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story