தூத்துக்குடியில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடியில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, பட்டதாரிகள், உயர்கல்வி சேர்க்கை கிடைக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேருவதற்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்களை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 7-ந் தேதி வரை சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 12-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.
இது ஒரு ஆண்டுகால பயிற்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் நகை மதிப்பீடு பயிற்சி ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான விண்ணப்பங்களை "முதல்வர், தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், மதுரை கோட்ஸ்தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை (மில்கோஸ்டோர்) வளாகம், 79 கடற்கரைச்சாலை, உதவி கலெக்டர் அலுவலகம் அருகில், தூத்துக்குடி 628 001, தொலைபேசிஎண்: 0461 2334555, 9498063042" என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவல் தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.