தூத்துக்குடியில்மீனவர் தூக்கு போட்டு சாவு


தூத்துக்குடியில்மீனவர் தூக்கு போட்டு சாவு
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிலுவைப்பட்டி சமீர்வியாஸ் நகரை சர்ந்தவர் அந்தோணிஜெயபால் (வயது 63). மீனவர். இவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது, காலில் அடிபட்டு உள்ளது. இதனால் அவர் ஊன்றுகோலை பயன்படுத்தி நடந்து வந்தாராம். இதில் மனம் உடைந்து காணப்பட்ட அந்தோணி ஜெயபால் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story