தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:46 PM GMT)

தூத்துக்குடியில் சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு மையங்களில் ஏற்பட்டு உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி வழங்குவதை சத்துணவு பணியாளர்கள் மூலம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். தேர்தல்கால வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ்நிறுத்தம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி, மாநில துணைத்தலைவர் கனகவேல், மாவட்ட துணைத்தலைவர் கனகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகலட்சுமி நன்றி கூறினார்.

பேரணி

முன்னதாக சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு பேரணி வ.உ.சி கல்லூரி முன்பு இருந்து தொடங்கியது. தூத்துக்குடி வட்ட தலைவர் பாக்கியசீலி பேரணியை தொடங்கி வைத்தார்். பேரணி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே முடிவடைந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு பங்கேற்றனர்.


Next Story