தூத்துக்குடியில்இலவச கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகிறது. இந்த முகாம் தூத்துக்குடி இ.பி. கவிதா திருமண மண்டபத்தில் நடக்கிறது. முகாமில் கண் புரை நோயாளிகளுக்கு இலவசமாக ஆபரேசன் செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை மற்றும் சகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் கொண்டு வர வேண்டும் என்றும் எஸ்.ஏ.வி. பள்ளி முன்னாள் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்
Related Tags :
Next Story