தூத்துக்குடியில்இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமைநடக்கிறது


தூத்துக்குடியில்இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமைநடக்கிறது
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட நட்டாத்தி நாடார் நலச்சங்கம் மற்றும் தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ பரிசோதனை முகாம்நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள ஐசக் ஆனந்த் மகாலில் நடக்கிறது. இந்த முகாமுக்கு தூத்துக்குடி மாவட்ட நட்டாத்தி நாடார்கள் நலச்சங்கம் தலைவர் ஏ. ஆனந்தகுமார் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு என். சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்கிறார். டாக்டர். டி. ராஜ்குமார், நட்டாத்தி ஜாமீன் டி. காளிதாஸ் பண்ணையார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க விவசாய தொழிலாளர் அணி தலைவர் எஸ். வி. பி.எஸ். பண்டாரம், நட்டாத்தி நாடார்கள் நலச்சங்க புரவலர் கே. வேல்ராஜ், ஜெயகாந்தி குரூப் தலைவர் ஏ. பிரகாஷ் ஆகியோர் முகாமுக்கு முன்னிலை வகிக்கின்றனர்.

முகாமில்குழந்தையில்லாத தம்பதிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். பச்சிளம் குழந்தைகள்நல மருத்துவர் குமார் ஆனந்த், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் உடையப்பன், தைராய்டு அறுவை சிகிச்சை நிபுணர் முத்துக்குமார், குடல், வயிறு மற்றும் ஜீரணமண்டல அறுவை சிகிச்சை நிபுணர் அசோக்குமார், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் கணேஷ், பொது சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெகதீஸ், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஷேக் ஹாலித், தோல்நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஹவ்துல் ஆலம், நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நிரஞ்சன் பிரபாகர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பிரபாகரன், மகளிர்நலம் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவர் தாமரை செல்வி, பொது அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் ஆறுமுகம், செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் டி. காதர்சா மற்றும் பிர்தவ்ஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து இலவச மருந்துகள், மாத்திரைகள் மற்றும் தக்க ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம் ஆகியவை பார்க்கப்படும். மேலும் தேவைப்படுவோருக்கு ஈ.சி. ஜி. மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நட்டாத்தி நாடார் நலச்சங்கம் தலைவர் ஆனந்தகுமார், ஜெயந்தி குரூப் பிரகாஷ், நட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீத், தீபன் மற்றும் பாபு ஆகியோர் செய்து உள்ளனர்.


Next Story