தூத்துக்குடியில்கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம்
தூத்துக்குடியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடியில் சிறுவர்களுக்கான இலவச கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நடந்தது. முகாமை தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு வாரம் பயிற்சிகள் நடந்தது.
முகாமில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50 சிறுவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக அணியின் முன்னாள் கால்பந்து வீரர் கெய்ஸிந்த் கால்பந்தாட்டத்தின் அடிப்படை நுணுக்கங்கள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கும் தினமும் முட்டை, பால் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாம் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற சிறுவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். துணை பயிற்சியாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அனைத்து சிறுவர்களுக்கும் விளையாட்டு சீருடை மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பெற்றோர், கால்பந்து கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக செயலாளர் மெரின்டோ வி.ராயன் நன்றி கூறினார்.
முகாம் ஏற்பாடுகளை ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகத்தின் தலைவர் பிரின்ஸ்டன் பர்னாந்து, செயலாளர் மெரின்டோ வி.ராயன், பொருளாளர் ஆரோக்கிய ராஜ், தொழில்நுட்ப இயக்குனர் ரமேஷ் பர்னாந்து ஆகியோர் செய்து இருந்தனர்.