தூத்துக்குடியில்நர்சிடம் தங்க சங்கிலி பறிப்பு
தூத்துக்குடியில் நர்சிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரும் பெண், தனது தாயுடன் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் பீச் ரோடு வழியாக சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story