தூத்துக்குடியில்அரசு மருத்துவக்கல்லூரிமாணவர்கள் ரத்த தான முகாம்


தூத்துக்குடியில்அரசு மருத்துவக்கல்லூரிமாணவர்கள் ரத்த தான முகாம்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரத்த தான முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 'உதிரம்-23' என்ற பெயரில் ரத்ததான முகாமை நடத்தினர். முகாமுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் தலைமை தாங்கினர். உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ்ஜெயமணி முன்னிலை வகித்தார். முகாமில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 350 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஆர்.சாந்தி தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் மொத்தம் 300 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

முகாமில் மருத்துவக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் என். சபரிராஜா, இளையோர் செஞ்சிலுவை சங்க அலுவலர் என். இஸ்ரேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story