தூத்துக்குடியில்அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து சாவு
தூத்துக்குடியில் அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம் (வயது 44). இவர் முள்ளக்காடு தங்கம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story