தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி


தூத்துக்குடியில்  சமூக நல்லிணக்க மனித சங்கிலி
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி

சமூக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி அக்டோபர் 11-ந் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும் என காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடியில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கைகோர்த்து நின்றனர்.

மனித சங்கிலியில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநகர செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அகமது இக்பால், ம.தி.மு.க மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முனியசாமி, திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் பால்.பிரபாகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் சாதிக் பாட்சா, எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் கனி மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.


Next Story