தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர், தந்தை பெரியாரை தொடர்ந்து அம்பேத்கர் உருவப்படத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டவர்களை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ கணேசன், செயற்குழு உறுப்பினர் சிறுத்தை குமார், முன்னாள் செய்தி தொடர்பாளர் செல்வக்குமார், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், வக்கீல் அணி அர்ஜூன், ஒன்றிய செயலாளர் மகராசன், மாணவர் அணி செரீப், மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை செயலாளர் விமல் வங்காளியார், மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் பெஞ்சமின், மாவட்ட பொறுப்பாளர் முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசளை தெற்கு மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story