தூத்துக்குடியில் சாரல் மழை


தூத்துக்குடியில்   சாரல் மழை
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி

தமிழகத்தில் கடந்த 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில தினமும் பகலில் வெயில் அடிக்கிறது. மாலையில் மழை பெய்யத் தொடங்குகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயிலும் தலைகாட்டியது. மாலை 6 மணி அளவில் மிதமான மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடம் மட்டுமே நீடித்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை தூத்துக்குடியில் 1 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 3.5, திருச்செந்தூர் 1, காயல்பட்டினம் 1, குலசேகரன்பட்டினம் 4, சாத்தான்குளம் 5, கயத்தார் 3, விளாத்திகுளம் 4, காடல்குடி 6, ஓட்டப்பிடாரம் 2, மணியாச்சி 21 மில்லி மீட்டர் மழை பெய்தது.


Next Story