தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கியவர் கைது


தூத்துக்குடியில்  ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஐ.ஜி. அஸ்ராகார்க்கிற்கு கிடைத்த தகவலின் பேரில் அவரது தனிப்படையினர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தூத்துக்குடி தபால்தந்தி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்த 138 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். மேலும் இதனை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடியில் பதுக்கி வைத்திருந்த தபால் தந்தி காலனியை சேர்ந்த சுடலை கண்ணு (வயது 39) என்பவரை பிடித்து சிப்காட் போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைகண்ணுவை கைது செய்தனர்.


Next Story