தூத்துக்குடியில் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா
தூத்துக்குடியில் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 40-ம் ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அன்றனி புருனோ தலைமையில், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் விக்டர், மார்ட்டின் ஆகியோர் திருவிழாத் திருப்பலியை நடத்தினர். நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து மக்கள் கேக் வெட்டி வேளாங்கண்ணி மாதா பிறந்தநாளை கொண்டாடினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story