தூத்துக்குடியில்மதபோதகர் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடியில் மதபோதகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் மதபோதகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மதபோதகர்
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது 62). கிறிஸ்தவ மதபோதகர். இவருடைய மனைவி புளோரா.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெயபாண்டியன் சமீபகாலமாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
உடல் கருகிய நிலையில்...
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெயபாண்டியன் வீட்டில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஜெயபாண்டியனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் வந்து கதவை தட்டினர். ஆனால் உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ெஜயபாண்டியன் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீக்குளித்து தற்கொலை
இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெயபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயபாண்டியன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஆனால் தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.