தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கனிமொழி எம்.பியிடம் மனு


தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கனிமொழி எம்.பியிடம் மனு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:07+05:30)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு, ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக தமிழக அரசால் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திலும், அரசியல் கட்சி தலைவர்களிடமும் மனு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கனிமொழி எம்.பி.யிடம் மனு கொடுப்பதற்காக நேற்று காலை அவரது இல்லத்துக்கு வந்தனர். அங்கு கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


Next Story