தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்


தூத்துக்குடியில்  தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட விக்டோரியா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 40 ஆசிரியைகள் மற்றும் 30 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளி நேற்று காலை திறந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளி முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், எங்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் எங்களுக்கு குறைவான ஊதியத்தை வழங்குகின்றனர். இது குறித்து நிர்வாகிகளிடம் கேட்ட போது, எங்களை தரக்குறைவாக பேசினர். எங்களுக்கு முறையான ஊதியமும், பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story