தூத்துக்குடியில்மின்சாரம் தாக்கி ரெயில்வே ஊழியர் சாவு


தூத்துக்குடியில்மின்சாரம் தாக்கி ரெயில்வே ஊழியர் சாவு
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, மேல சண்முகபுரம், வண்ணார் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பால் தங்க ஜெபராஜ் (வயது 45). ரெயில்வே ஊழியர். இவர் புதிதாக கட்டிய வீட்டில் கிரக பிரவேச விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதனால் வீட்டின் மாடியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற பால் தங்க ஜெபராஜ், சாமியானா பந்தலின் இரும்பு பைப்பை தொட்டாராம். அப்போது, அந்த பகுதியில் உள்ள மின்சார ஒயர் மூலம் அந்த இரும்பு குழாயில் பரவி இருந்த மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார், பால்தங்க ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story