தூத்துக்குடியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை


தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். உதவி இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், பிரைஸ் மாத்யூ ஆகியோர் முன்னிலையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலையம் வந்த பயணிகளின் உடைமைகள மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்தனர்.

மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். அப்போது, ரெயில் பயணிகள் ரெயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பட்டாசுகள் கொண்டு செல்லக்கூடாது, மீறி கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story