தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு


தூத்துக்குடியில்  ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 21-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஊர்க்காவல்படை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல்படை வீரர்கள், போலீசுக்கு உதவியாக பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 ஆண்கள், 6 பெண்கள் ஆக மொத்தம் 41 பணியிடங்களுக்கு ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள, சேவை மனப்பான்மையுடன் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். எந்தவித குற்ற பின்னணியும் இல்லாத ஆண்கள், மற்றும் பெண்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.

வருகிற 21-ந் தேதி

இந்த தேர்வு வருகிற 21-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை அலுவலக கவாத்து மைதானத்தில் நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story