தூத்துக்குடியில் சத்துணவு- அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் சத்துணவு- அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் காலி தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அடைக்கலம், அந்தோணியம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் என்ற முறையில் அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈமக்கிரியை தொகை ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் உத்தண்டராமன், துணை பொதுச் செயலாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story