தூத்துக்குடியில்ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக மற்றொரு டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு வானியன்விளையை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் சுந்தர் (வயது 51). இவர் பண்டுகரை சாலை எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார்.
அதே ஆட்டோ ஸ்டாண்டில் தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் விசுவநாதன் (42) என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு இடையே சவாரி எடுப்பதில் பிரச்சினை இருந்து வந்து உள்ளது.
கடந்த 25-ந் தேதி ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் வைத்து விசுவநாதன், சுந்தரிடம் தகராறு செய்து தவறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுந்தரின் மனைவியிடமும் விசுவநாதன் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து விசுவநாதனை கைது செய்தார்.