தூத்துக்குடியில்பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் பெயிண்டருக்கு அரிவாளால் வெட்டப்பட்டார்.
தூத்துக்குடி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 37). பெயின்டர். இவருக்கும், புதுக்கோட்டை, ராஜீவ் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலா என்ற பாலமுருகனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இவர்கள் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மகேஷ்குமார் திரு.வி.க நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு வந்த பாலா உள்ளிட்ட 6 பேருக்கும், மகேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாலா உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து மகேஷ்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.