தூத்துக்குடியில்கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்
தூத்துக்குடியில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலர் எஸ்.அந்தோணி அதிர்ஷ்டராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 15.5.23 வரை 15 நாட்கள் நடக்கிறது.
இந்த முகாம் தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் நடக்கிறது.
இலவசம்
இந்த பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவச பயிற்சி ஆகும். நுழைவு கட்டணம் இல்லை.
ஆகையால் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.