தூத்துக்குடியில் வீட்டு மாடியில் இருந்த குடிசை தீப்பிடித்து சேதம்


தூத்துக்குடியில்  வீட்டு மாடியில் இருந்த குடிசை தீப்பிடித்து சேதம்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீட்டு மாடியில் இருந்த குடிசை தீப்பிடித்து சேதம் அடைந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் வீட்டின் மாடியில் ஓலையால் சிறிய குடிசை அமைத்து இருந்தாராம். இதில் பல்வேறு புத்தகங்களை வைத்து இருந்தாராம். இந்த நிலையில் திடீரென குடிசை தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் குடிசை மற்றும் அதில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story