தூத்துக்குடியில்மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் சிக்கினார்


தூத்துக்குடியில்மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மூதாட்டி கொலை வழக்கில் ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று வாலிபர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி கொலை

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கனி. இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 68). கணவர் கனி. இவர் ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர். இவர் இறந்துவிட்டார். அவர்களது ஒரே மகனும் கடந்த ஆண்டு இறந்து விட்டாராம். இதனால் அந்தோணியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி அந்தோணியம்மாள் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். அவர் அணிந்து இருந்த நகைகளும் திருடப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து அந்தோணியம்மாள் உடலை கைப்பற்றி போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வடபாகம் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில், அந்தோணியம்மாள் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வந்தனர்.

கைது

இந்த வழக்கில் ஒரு மாதத்துக்கு பிறகு தற்போது துப்பு துலங்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்தணராஜ் (வயது 24) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story