தூத்துக்குடியில் அச்சிட்ட தாளில் உணவு பண்டம் விற்ற 4 கடைகளுக்கு அபராதம்


தூத்துக்குடியில்   அச்சிட்ட தாளில் உணவு பண்டம்   விற்ற  4 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அச்சிட்ட தாளில் உணவு பண்டங்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை உணவு விதிமுறை மீறல்கள் குறித்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் கால் யுவர் கலெக்டர் புகார் சேவை எண்ணுக்கு வரப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்திரவின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2 உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து, தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள 19 கடைகளை ஆய்வு செய்தார். அப்போது, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழுக்குத் தகுதி பெற்றிருந்தும், அதனைப் பெறாமலும், நியூஸ் பேப்பரில் வடை, பஜ்ஜி ஆகியவற்றை நுகர்வோர்களுக்கு வழங்கியதாலும் 4 கடைகளுக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மூடப்படும்

எனவே உணவு வணிகர்கள் எவரும், அச்சிடப்பட்ட தாள் அல்லது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கிலோ உணவுப் பொருட்களைப் பரிமாறினாலோ அல்லது பார்சல் செய்தாலோ, முதல் முறை ஆயிரம் ரூபாய்க்கு குறையாமலும், இரண்டாம் முறை இரட்டிப்பாகவும், மூன்றாம் முறை ஐந்தாயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டு, கடையும் மூடப்படும். அதுபோல், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழுக்குத் தகுதி பெற்றிருந்தும், அதனைப் பெறாமல் உணவு வணிகம் புரிந்தால், முதல் முறை ஐந்தாயிரம் ரூபாயும், இரண்டாவது முறை கடை மூடப்படும். எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டவிதிகளைப் பின்பற்றி, நுகர்வோர்களுக்கு பாதுகாப்பன உணவை வழங்கிடவும், தங்களது தொழிலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும்ம் உணவு வணிகர்களை உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் மாரியப்பன் கேட்டுக் கொண்டு உள்ளார்.


Next Story