தூத்துக்குடியில் கேட்பாரற்று நின்ற மோட்டார் சைக்கிள் மீட்பு
தூத்துக்குடியில் கேட்பாரற்று நின்ற மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மில்லர்புரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இது சென்னை பதிவு எண் கொண்டதாகவும் இருந்தது. இந்த மோட்டார் சைக்கிளை கடந்த சில நாட்களாக யாரும் எடுக்காததால், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளாகவோ, வேறு ஏதேனும் வழக்குகளில் சிக்கிய மோட்டார் சைக்கிளாகவோ இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story