தூத்துக்குடியில்மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் கீதாஜீவன்
சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மொபட்டுகள், 20 பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோருக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான இலவச திறன் பேசிகளும் வழங்கப்பட்டன. விழாவில் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.