தூத்துக்குடியில்பணம் கேட்டு தொழிலாளியைஅரிவாளால் வெட்டிய 2பேர் கைது
தூத்துக்குடியில் பணம் கேட்டு தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் தொழிலாளியை பணம் கேட்டு அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 பேர் சிக்கினர்
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த ஜெயம் மகன் வெற்றிவேல் முருகன் என்ற சின்னத்தம்பி (வயது 27), செல்வகுமார் மகன் உத்தண்டுராஜ் (21) என்பது தெரியவந்தது.
அரிவாள் வெட்டு
அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் வெற்றிவேல் முருகன் என்ற சின்னத்தம்பி, உத்தண்டுராஜ் ஆகிய 2 பேரையும் பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெற்றிவேல் முருகன் என்ற சின்னத்தம்பி மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.