தூத்துக்குடியில்தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல்
தூத்துக்குடியில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகன் மாடசாமி (வயது 29). தொழிலாளி. இவர் கடந்த 7-ந் தேதி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தூத்துக்குடி குறுக்குசாலை கீழசெய்தலையை சேர்ந்த காட்டு ராஜா மகன் செல்வம் (24) என்பவர் மீது தெரியாமல் இடித்து விட்டாராம். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாக்கி கொலை மிரட்டல்
இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் அங்கு நின்று கொண்டு இருந்த தனது நண்பர்கள் சென்னை கிண்டியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் பிரதீஷ் (29), தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த ஜெகநாதன் மகன் செல்வகணேஷ் (27) ஆகியோருடன் சேர்ந்து மாடசாமியை பீர் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
3 பேர் கைது
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் வழக்கு பதிவு செய்து செல்வம், பிரதீஷ், செல்வகணேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட பிரதீஷ் மீது 12 வழக்குகளும், செல்வகணேஷ் மீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.