தூத்துக்குடியில்உலக தாய்மொழி தின விழிப்புணர்வு பேரணி


தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உலக தாய்மொழி தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக தாய்மொழி தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தாய் மொழியின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், உதவி தலைமை ஆசிரியர் விக்டர் டிசோசா ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

விழிப்புணர்வு

பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி எம்பரர் தெரு, தீயணைப்பு நிலையம், தமிழ்ச்சாலை வழியாக மீண்டும் பள்ளிக்கூடத்தை வந்தடைந்தது. பேரணியில் சென்ற மாணவர்கள், தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் அட்டைகளை பிடித்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியல் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் யூஜின், ஹென்றி ஸ்டீபன்சன், ஹம்ப்ரி மிரான்டா, ஆசிரியர் சங்க செயலாளர் செல்வன் சில்வா மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், ஆசிரியர்கள் வீரர்களும், இதர ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் லூர்துசாமி, தேசிய மாணவர் படை கமாண்டர் கில்பர்ட் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story